HomeTop Storiesஇந்தியா தமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமா லைஃப்ஸ்டைல்தொழில்நுட்பம்ஆன்மீகம்
Advertisement

மூடப்படுகிறது சென்னை உதயம் திரையரங்கம்? அங்கு என்ன வருகிறது தெரியுமா?

11:14 AM Feb 15, 2024 IST | கெளதம்
Udhayam theatre [Image -The Hindu]
Advertisement

சென்னை: அசோக் நகரின் அடையாளமாக திகழ்ந்த பிரபல உதயம் திரையரங்கம் நிரந்தரமாக மூடப்படுகிறது. கொரோனா காலகட்டத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள பல திரையரங்குகளின் நிலைமை மோசமடைந்து மூடும் தருவாயில் உள்ளது.

Advertisement

அந்த வகையில்,  1983ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உதயம் திரையரங்கில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் ஆகிய திரைகள் இயங்கி வந்தன. முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித்தின் படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

அங்கு திரையிடப்பட்ட முதல் படம் ரஜினிகாந்த் நடித்த 'சிவப்பு சூரியன்' என்று கூறப்படுகிறது.  இந்த மாதிரியான திரையரங்குகள் முதல் இடங்களில் இருந்தாலும், அவை நஷ்டம் ஏற்படுவதன் காரணமாக, திரையரங்கு உரிமையாளர்கள் வேறு வழியில்லாமல் ரியல் எஸ்டேட் டெவலப்பர்களுக்கு விற்கின்றனர்.

3 முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன்! பாடகி பிரியங்கா சிங் பகீர் தகவல்!

அதுபோல், கடந்த சில ஆண்டுகளாக உதயம் திரையரங்கிற்கு பார்வையாளர்களின் வருகை குறைந்து வந்த நிலையில், அந்த இடத்தை சென்னையில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனதிற்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
உதயம் திரையரங்கம்சென்னைUdhayamUdhayam theatre
Advertisement