For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

இனி பைக் வாங்குறது கஷ்டம்..உயர்கிறது விலை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

01:20 PM Jul 01, 2023 IST | gowtham
இனி பைக் வாங்குறது கஷ்டம்  உயர்கிறது விலை   அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Hero MotoCorp [Image source : Hero MotoCorp
Advertisement

பைக்குகளின் விலையை மீண்டும் உயர்த்துவதாக ஹீரோ மோட்டோகார்ப் அறிவித்துள்ளது.

இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான 'Hero MotoCorp' குறிப்பிட்ட மாடல் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை ஜூலை 3 முதல் சுமார் 1.5% உயர்த்துவதாக அறிவித்துள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விலை மீண்டும் உயர்த்தப்படுவதாக கூறப்படுகிறது.

Hero MotoCorp
Hero MotoCorp [Image source : 5paisa]

குறிப்பாக, Splendor, Glamour, Pleasure, Passion pro மற்றும் பிற மாடல்களின் விலைகள் அதிகரிக்க உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம்தான் ஹீரோ பைக்குகளின் விலை அதிகரிக்க உள்ளதாம்.

Hero MotoCorp
Hero MotoCorp [Image source : Zee News]

இந்த ஆண்டு ஏப்ரலில் சுமார் 2 சதவீதம் விலையை உயர்த்திய அந்நிறுவனம், அதன் சமீபத்திய அதிகரிப்பின் சரியான அளவு குறிப்பிட்ட மாதிரிகள் மற்றும் சந்தைகளைப் பொறுத்து மாறுபடும் என்று ஹீரோ மோட்டோகார்ப் கூறியுள்ளது.

Hero MotoCorp [Image source : Hero MotoCorp
Hero MotoCorp [Image source : Hero MotoCorp

இந்தியாவின் கார்ப்பரேட் விவகார அமைச்சகம், மூன்றாம் தரப்பு விற்பனையாளருடன் ஹீரோவின் உறவை மதிப்பிடுவதற்கு விசாரணைக்கு உத்தரவிட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன அறிக்கை கூறுகிறது.

Advertisement