For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

#Breaking : ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் மேலும் ஒருவர் தற்கொலை..!

12:00 PM Mar 25, 2023 IST | லீனா
 breaking   ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் மேலும் ஒருவர் தற்கொலை
Advertisement

திருச்சி திருவெறும்பூரில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த மருத்துவமனை ஊழியர் ரவிசங்கர் தற்கொலை. 

திருச்சி திருவெறும்பூரில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த மருத்துவமனை ஊழியர் ரவிசங்கர் அதிக அளவிலான தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளார்.

ஆன்லைன் ரம்மியால் தற்கொலை 

துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் ஊழியராக ரவிசங்கர் பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைன் ரம்மியால் அதிகளவிலான பணத்தை இழந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த ரவிசங்கர் அதிமுக அளவிலான தூக்க மாத்திரைகளை  உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஏற்கனவே தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் 41 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சுரேஸ் என்பவர் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் எழுதியிருந்த கடிதத்தில் எனது மரணமே கடைசியாக இருக்க வேண்டும் என எழுதியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மரணம் ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்காக தமிழக அரசு சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement