For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

breaking news: மோடி தூத்துக்குடி வருகை !மாணவிகள் அழைப்பு ..!

08:51 PM Jun 06, 2018 IST | Dinasuvadu Web
breaking news  மோடி தூத்துக்குடி வருகை  மாணவிகள் அழைப்பு
Advertisement

தூத்துக்குடிக்கு வர உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் திட்டத்தால் பயன் பெற்ற மக்களிடம் நேரடியாக மோடி, காணொலி காட்சி மூலம் உரையாடி வருகிறார்.

இந்த வகையில் பள்ளி மாணவர்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அடல் டிங்கரிங் லேப் திட்டத்தால் பயன்பெற்ற தூத்துக்குடியில் உள்ள சுப்பையா வித்யாலா பள்ளி மாணவிகளுடன் அவர் காணொலி காட்சி மூலம் டெல்லியில் இருந்தபடியே கலந்துரையாடினார். அப்போது சூரிய ஒளி மின்சக்தி மூலம் நவீன நீர் பாசன எந்திரத்தை உருவாக்கி உள்ளது குறித்து மாணவி ஜீவிதா பெத்துலட்சுமி  பிரதமரிடம் விளக்கி கூறினர்.

தூத்துக்குடிக்கு வரவேண்டும் என்றும் மாணவி வேண்டுகோள் விடுத்தார். மாணவியின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட மோடி, தூத்துக்குடிக்கு தாம் வருவதாக உறுதி அளித்தார்.

Tags :
Advertisement