For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

வெடிகுண்டு மிரட்டல் - இன்டர்போல் உதவியை நாட முடிவு..!

08:41 AM Feb 09, 2024 IST | murugan
வெடிகுண்டு மிரட்டல்   இன்டர்போல் உதவியை நாட முடிவு
Interpol [File Image]
Advertisement

நேற்று சென்னையில் உள்ள சென்னை கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த 13 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். 13 இந்த பள்ளிகளுக்கு நேற்று காலை ‘jhonflow1@proton.me’ என்ற பெயரில் தனித்தனியாக மின்னஞ்சல் வந்தது.

வெடிகுண்டு மிரட்டல் குறித்த தகவல்சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனால் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் அந்தந்த பள்ளிகள் முன்பு குவிந்தனர்.  இதனால் பதற்றமான நிலை காணப்பட்டது. பின்னர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 13 தனியார் பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின்படி காவல்துறை மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபர் மீது வழக்குபதிவு செய்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வந்தனர்.

இன்று ஆ.ராசாவை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்..!

இந்நிலையில், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் ஐ.பி முகவரியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியோடு இன்டர்போல்  போலீஸ் உதவி நட சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது. வெளிநாடுகளின் தனியார் நெட்வொர்க் பயன்படுத்தி இந்த மின்னஞ்சல் அனுப்பி இருக்கலாம் என சந்தேகம் எழுந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் முழுமையாக சோதனை நடத்தியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அச்சமின்றி பள்ளிகளை நடத்த அந்தந்த காவல் நிலைய போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கும் உத்தர பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement