For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

U19WC2024 : அமெரிக்காவை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி ..!

09:46 PM Jan 26, 2024 IST | Ahil
u19wc2024   அமெரிக்காவை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி
Advertisement

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 17-வது போட்டியாக இன்று அமெரிக்க அணியும், வங்காளதேச அணியும் மோதியது. அதில் முதலில் டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து வங்காளதேச அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

சீரான இடைவெளியில் விக்கெட்டை விட்டு கொடுத்தாலும் ரன்களை சேர்ப்பதில் வங்கதேச அணி கவனம் செலுத்தியது. வங்காளதேச வீரரான அரிஃபுல் இஸ்லாம் சிறப்பாக விளையாடி 103 ரன்கள்  எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் கூட்டணி அமைத்து விளையாடிய அஹ்ரார் அமீன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் வங்காளதேச அணி 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 297 ரன்கள் சேர்த்தது.

அயர்லாந்தை பந்தாடி இந்திய அணி அபார வெற்றி..! 

பின் 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமெரிக்கா அணி தொடக்கத்தில் சற்று சிறப்பான வெளி படுத்திய அமெரிக்க அணி ஒரு கட்டத்திற்கு மேல் மிகவும்மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி படுதோல்வியை அடைந்தது.

அந்த அணியின் விக்கெட் கீப்பரான பிரணவ் செட்டிபாளையம் 57 ரன்கள் எடுத்து அதிகபட்ச ஸ்கோரை எடுத்திருந்தார். வங்காளதேச அணியின்  கேப்டன் ஆன மஹ்புஸூர் ரஹ்மான் ரபி  4 விக்கெட்டுகள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். இதனால் வங்காளதேச அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

Tags :
Advertisement