HomeTop Storiesஇந்தியா தமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமா லைஃப்ஸ்டைல்தொழில்நுட்பம்ஆன்மீகம்
Advertisement

கேரளாவும் என்னோட கோட்டை தான்! கெத்து காட்டும் தளபதி விஜய்!

05:53 PM Mar 18, 2024 IST | பால முருகன்
vijay kerala [File Image]
Advertisement

Vijay நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டையும் தாண்டி பல இடங்களில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலும் தமிழகத்திற்கு அடுத்த படியாக சொல்லவேண்டும் என்றால் கேரளாவை கூறலாம். ஏனென்றால், கேரளாவில் அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இதனை பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று கூட இல்லை.

Advertisement

read more- கதறி அழுது கால்ஷீட் கேட்ட அறிமுக இயக்குனர்? பீக்கில் இருந்தபோதே யோசிக்காமல் கொடுத்த சரத்குமார்!

விஜய் நடித்த  படங்கள் கேரளாவில் வெளியானால் போதும் தமிழகத்தில் எந்த அளவிற்கு கொண்டாடப்படுமோ அதே அளவிற்கு முதல் நாளிலும் படத்தை கொண்டாடுவார்கள். கடைசியாக 14-ஆண்டுகளுக்கு முன்பு காவலன் படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் கேரளா சென்று இருந்தார். அப்போதே அவரை ரசிகர்கள் பார்க்கவேண்டும் என்று கூட்டமாக கூடியிருந்தார்கள்.

read more- கால் அமுக்கிவிட வந்த மூத்த நடிகர்! கேப்டன் விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்?

இந்த நிலையில், அதனை தொடர்ந்து 14-ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விஜய் மீண்டும் தி கோட் படத்தின் படப்பிடிப்புக்காக கேரளாவிற்கு சென்றுள்ளார். அவரை பார்க்கவேண்டும் என்று அங்கு இருக்கும் ரசிகர்கள் அனைவரும் விரைவாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கூடியுள்ளனர். இந்த செய்தி தான் தற்போது ட்ரென்டிலும் இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

vijay in kerala [File Image]
அந்த அளவிற்கு கேரளாவையே அதிர வைக்கும் அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் விஜய்யை பார்க்க ஆவலுடன் விமான நிலையத்தில் கூடியுள்ளது. அதைப்போல, கோட் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் திருவனந்தபுரம் கிரிக்கெட் மைதானத்திலும் பல ரசிகர்கள் கூடியுள்ளனர். மேலும் சிலர் பைக்கில் விஜயின் புகைப்படத்தை வைத்து கொண்டு பைக் பேரணையிலும் ஈடுபட்டுள்ளனர்.  இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

read more- கமல்ஹாசனை பார்த்தாலே நடுங்கும் பிரபல நடிகை! அப்படி என்ன செஞ்சிட்டாரு உலகநாயகன்?

ரசிகர்கள் கூடியிருந்ததை பார்த்த விஜய் உடனடியாக தனது காரில் இருந்து வெளியே வந்து ரசிகர்களை கை அசைத்து உற்சாகப்படுத்தினார். விஜய்யை பார்த்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் தளபதி தளபதி என கரகோஷமிட்டனர்.

READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு!

விஜய் கடைசியாக தனது 69-வது  படத்தில் நடித்து முடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகி அரசியல் பயணத்தில் ஈடுபடவுள்ளார். அப்படி இருந்தும் கூட அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் கூட குறையவில்லை என்றே கூறலாம். கேரளாவில் அவருக்கு இருக்கும் மார்க்கெட்டை பார்த்து தமிழ் ரசிகர்களே அரண்டுபோய் இருக்கிறார்கள்.

Tags :
கேரளாவிஜய்Trivandrum AirportVijayVijay fansVijay in KeralaVIJAYStormHitsKerala
Advertisement