For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

ஒயின் மதுபானங்களை அழிக்க 1,780 கோடி ரூபாய் ஒதுக்கீடு.! பிரான்ஸ் அரசு அதிரடி நடவடிக்கை.!

06:09 PM Aug 26, 2023 IST | மணிகண்டன்
ஒயின் மதுபானங்களை அழிக்க 1 780 கோடி ரூபாய் ஒதுக்கீடு   பிரான்ஸ் அரசு அதிரடி நடவடிக்கை
[Representative Image]
Advertisement

பிரான்ஸ் நாட்டில் தற்போது அளவுக்கு அதிகமாக ஒயின் எனும் மதுபானம் உற்பத்தி செய்யப்பட்டு விட்டது. இதனால் அங்கு ஒயின் உற்பத்தியினை நிறுத்த சொல்லி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

மதுபிரியர்கள் தற்போது ஒயின் பக்கத்தில் இருந்த தங்கள் பார்வையை பீர் பக்கம் திரும்பியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் ஒயின் தொழிற்சாலைகள் வேறு தொழில் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 அளவுக்கு அதிகமாக தயாரிக்கப்பட்டுள்ள ஒயின் பாட்டில்களை அழிப்பதற்கு பிரான்ஸ் அரசு அந்நாட்டு மதிப்பில் 200 யூரோக்களை ஒதுக்கியுள்ளது. இந்திய மதிப்பின்படி 1,780 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement