For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

சாம்பாரில் கிடந்த எலி.. பிரபல உணவகத்துக்கு சீல் வைப்பு.!

05:13 PM Jun 21, 2024 IST | கெளதம்
சாம்பாரில் கிடந்த எலி   பிரபல உணவகத்துக்கு சீல் வைப்பு
dead rat in sambhar [File Image]
Advertisement

குஜராத் : அகமதாபாத்தில் ஒரு தம்பதியினர் தங்களுக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் கிடந்த இறந்த போன எலி இருப்பதைக் கண்டு அதிர்ச்சிடைந்தனர்.

அஹமதாபாத்தில் வசிக்கும் அவினாஷ், தேவி ஆகியோர் அரண்மனை நகரின் நிகோல் பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் உணவருந்த அங்கு அருகளுக்கு தோசையில் பரிமாறப்பட்ட சாம்பாரில் "செத்த எலி" இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார்கள்.

உடனடியாக உணவக ஊழியர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், கோபமடைந்த அந்த தம்பதியனர் முனிசிபல் கார்ப்பரேஷனில் (AMC) புகார் அளித்தனர்.

அந்த புகாரை பெற்று கொண்டு உணவகத்தை ஆய்வு செய்த சுகாதாரத் துறை, உணவகத்தின் உரிமையாளர் அல்பேஷ் கெவாடியாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனைத்தொடர்ந்து அந்த உணவகத்துக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதே போன்ற ஒரு சம்பவம் சமீப நாட்களுக்கு முன் நடந்தது. ஹெர்ஷேயின் சாக்லேட் சிரப்பின் சீல் செய்யப்பட்ட பாட்டிலுக்குள் இறந்த போன சுண்டெலியை கண்டு அதிர்ச்சிடைந்தனர்.

Tags :
Advertisement