For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

கோவையில் 13 வயது சிறுமி மாயம்.! 6 தனிப்படைகள் மூலம் உடனடியாக மீட்ட போலீசார்.!

06:50 AM May 19, 2023 IST | மணிகண்டன்
கோவையில் 13 வயது சிறுமி மாயம்   6 தனிப்படைகள் மூலம் உடனடியாக மீட்ட போலீசார்
[Image source : Twitter/@ebehindofficial]
Advertisement

கோவையில் 13 வயது சிறுமி நேற்று முன் தினம் மாயமானதை தொடர்ந்து, காவல் துறையினர் 6 தனிப்படைகள் மூலம் நேற்று மீட்டனர். 

கோயம்புத்தூர் மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் , நேற்று முன் தினம் பகல் 12 மணி அளவில் காணாமல் போயுள்ளார். இதனை அடுத்து பெற்றோர்கள் உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

சிறுமி காணாமல் போன புகாரின் பெயரின் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர் 6 தனிப்படைகள் அமைத்து தேடினர். இதனை தொடர்ந்து, நேற்று பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் காணாமல் போன 13 வயது சிறுமி மீட்கப்பட்டார்.

வீட்டில் பெற்றோர்கள் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement