HomeTop Storiesஇந்தியா தமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமா லைஃப்ஸ்டைல்தொழில்நுட்பம்ஆன்மீகம்
Advertisement

4000 கோடி ரூபாய் மழைநீர் வடிகால்.. எந்த பயனும் இல்லை.! இபிஎஸ் கடும் விமர்சனம்.!

01:37 PM Nov 30, 2023 IST | மணிகண்டன்
ADMK Chief secretary Edappadi Palanisamy [File Image]
Advertisement

வங்கக்கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, மண்டலமாக நிலைகொண்டுள்ள காரணத்தால் நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள், வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

Advertisement

இதன் காரணமாக சென்னையில் பலவேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ஒரு சில இடங்களில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இரவு முதல் முதல்வர் எங்களை இயக்கியபடி இருந்தார்.. திமுக அமைச்சர்கள் பேட்டி!

சென்னை மழைநீர் வடிகால் பணிகள் குறித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிருப்தியை எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், சுமார் 4000 கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்டதாக கூறுகிறது. இரண்டரை ஆண்டு கால ஆட்சி இதுவரை ஒரு புயலை கூட சந்திக்கவில்லை. ஆனால் இந்த சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது.

திமுக அரசு நிர்வாகத் திறனற்று செயல்படுகிறது. கடந்த இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சிக்கு இதுவே சாட்சி. இன்று சென்னை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி தவிக்கிறது. திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டிற்கு, இந்த சாதாரண மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாத மழைநீர் வடிகால் திட்டமும் அதனால் பரவும் டெங்கு உட்பட பல பருவ மழைக்கால நோய்களால் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மக்களின் துயர் துடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்பாமல், ஆங்காங்கே உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுக என்று கேட்டுக்கொள்கிறேன் என அந்த பதிவில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Tags :
#ADMK#EPSஅதிமுகமழைநீர் வடிகால்கனமழைசென்னை கனமழைஎடப்பாடி பழனிசாமிChennai RainsEdappadi Palaniswamiheavy rain
Advertisement