For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

3-வது டெஸ்ட் போட்டி...இந்தியா பேட்டிங் தேர்வு..!

09:46 AM Feb 15, 2024 IST | murugan
3 வது டெஸ்ட் போட்டி   இந்தியா பேட்டிங் தேர்வு
rohit sharma [File Image]
Advertisement

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

தற்போது இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. இந்தியா ஆடும் லெவனில் வீரர்களை மாற்றங்களைச் செய்துள்ளது. உத்தரபிரதேச கிரிக்கெட் வீரர் துருவ் சந்த் ஜுரைல் மற்றும் சர்பராஸ் கான் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். துருவ் விக்கெட் கீப்பராக களமிறங்கி உள்ளார்.

டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் கேப்டன், துணை கேப்டனை அறிவித்தார் ஜெய்ஷா!

இந்திய அணி வீரர்கள்: 

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன் ), சுப்மான் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணி வீரர்கள்: 

சாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Tags :
Advertisement