For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

ஊட்டியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியதில் 3 பெண்கள் சடலமாக மீட்பு.! ஒரு பெண்ணை தேடும் பணி தீவிரம்.!

11:23 AM Dec 13, 2022 IST | மணிகண்டன்
ஊட்டியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியதில் 3 பெண்கள் சடலமாக மீட்பு   ஒரு பெண்ணை தேடும் பணி தீவிரம்
Advertisement

ஆனிக்கல் ஆற்றில் ஏற்றப்பட்ட வெள்ளத்தில் சிக்கிய பெண்களில் 3 பெண்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஒரு பெண்ணை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

மழை வரத்து காரணமாக உதகமண்டலம் ஆனிக்கல் ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது.

அப்போது நேற்று இரவு விழா முடிந்து பக்தர்கள் வீட்டிற்கு திரும்பும்போது, திடீரென காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டு 4 பெண் பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்தில்  அடித்து செல்லப்பட்டனர். உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இரவு முதல் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இதில் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்றது. இதில் துரதஷ்டவசமாக காணாமல் போன 4 பெண்களில் 3 பெண்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு பெண்ணை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags :
Advertisement