For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

பொம்மை ரயில் கவிழ்ந்து 11 வயது சிறுவன் மரணம்.. சண்டிகர் மாலில் நடந்த சோக வீடியோ!

06:23 PM Jun 24, 2024 IST | கெளதம்
பொம்மை ரயில் கவிழ்ந்து 11 வயது சிறுவன் மரணம்   சண்டிகர் மாலில் நடந்த சோக வீடியோ
train - shopping mall [File Image]
Advertisement

பஞ்சாப் : சண்டிகரின் எலன்டே மாலில் பொம்மை ரயில் கவிழ்ந்து ஷாபாஸ் என அடையாளம் காணப்பட்ட 11 வயது சிறுவன் பரிதாபமாக. இச்சம்பவம் ஜூன் 22 (சனிக்கிழமை) நடந்துள்ளது. அந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சண்டிகரில் உள்ள எலண்டே மாலில், பொம்மை ரயில் கவிழ்ந்து, நவன்ஷாஹரைச் சேர்ந்த ஷாபாஸ் என்ற 11 வயது சிறுவன் இறந்த சோகமான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவில், ஷாபாஸ் இருப்பதைக் காணலாம், ரயில் சென்றுகொண்டிருக்கும் பொழுது திடீரென கவிழ்ந்ததால், ஷாபாஸ் உடல் நசுங்கி விடுகிறது. ​​ரயில் சரியும் போது, அருகில் இருந்த சிலர் காப்பாற்ற ரயிலில் ஓடி வருகிறார்கள்.

ஷாபாஸ் அங்கிருந்து உடனடியாக GMCH 32 மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், பொம்மை ரயிலை பறிமுதல் செய்து, நடத்துனர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags :
Advertisement