For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

பள்ளிகளுக்கு எச்சரிக்கை! நீட் பயிற்சி தந்தால் அங்கீகாரம் ரத்து!அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு

04:36 PM Jul 05, 2018 IST | Venu
பள்ளிகளுக்கு எச்சரிக்கை  நீட் பயிற்சி தந்தால் அங்கீகாரம் ரத்து அமைச்சர் செங்கோட்டையன்  அதிரடி அறிவிப்பு
Advertisement

தனியார் பள்ளிகள் வேலை நேரத்தில் நீட் பயிற்சி தந்தால் அவர்களது அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கல்வித்துறையில் அடிக்கடி மாற்றங்கள் செய்து வருகின்றார்.இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இன்று தனியார் பள்ளிகள் ஒழுங்கு முறை சட்டத்திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தாக்கல் செய்தார்.

அவர் கூறுகையில்,பள்ளி நேரம் முடிந்தோ அல்லது விடுமுறை நாட்களிலோ நீட் பயிற்சி அளிக்கலாம் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும்  தனியார் பள்ளிகள் வேலை நேரத்தில் நீட் பயிற்சி வழங்கினால் அவர்களது அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.சிபிஎஸ்இ பள்ளிகள் இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழக அரசிடம் தடையில்லா சான்று வாங்க வேண்டும்.தனியார் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் உயிர் மற்றும் உடைமை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது .தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Tags :
Advertisement