For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

நெல்லை அருகே 8 வயது சகோதரியை அடித்துக் கொலை செய்த 14 வயது சிறுவன் !

02:44 PM Jun 10, 2018 IST | Venu
நெல்லை அருகே 8 வயது சகோதரியை அடித்துக் கொலை செய்த 14 வயது சிறுவன்
Advertisement

8 வயது சிறுமியை,சகோதரனான 14 வயது சிறுவன் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அடித்துக் கொலை செய்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்கோவிலை அடுத்த கிழக்குஅழகுநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் சின்னராமசாமி. அவரது 14 வயதான மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. சின்னராமசாமி  வெளியூரில் வேலைபார்த்து வருவதால் அவரது மகனும் மகளும் பாட்டி வீட்டில் வசித்து வந்தனர்.

நேற்று சிறுவனை அவரது பாட்டி ஞானபிரகாசம் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், களைகொத்தியால் பாட்டியையும் சகோதரியையும் சரமாரியாக தாக்கியுள்ளான். இதில் படுகாயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மூதாட்டி ஞானபிரகாசத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொலை குறித்து  விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Tags :
Advertisement