For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு யார் பொறுப்பு?சிதம்பரம் கேள்வி

01:58 PM Jun 10, 2018 IST | Venu
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு யார் பொறுப்பு சிதம்பரம் கேள்வி
Advertisement

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், தூத்துக்குடி சம்பவத்துக்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்பியுள்ள நிலையில், துணை வட்டாட்சியர்களின் பணியிடை நீக்கம் தான் பிரச்சினைக்கான தீர்வா என்றும் கேட்டுள்ளார். காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

முன்னதாக தூத்துக்குடியில் கலெக்டர் அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர்.இதனால் தூத்துக்குடி நகரமே கலவர பூமியாக மாறியது. போராட்டக்காரர்களை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். படுகாயம் அடைந்த பலர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Tags :
Advertisement