For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளையும் பறிமுதல் செய்யக்கோரி வழக்கு!

11:28 AM Jun 08, 2018 IST | Venu
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளையும் பறிமுதல் செய்யக்கோரி வழக்கு
Advertisement

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளையும் பறிமுதல் செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த தினகரன் கட்சியின் ஹென்றி தாமஸ் உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.சாட்சியங்களை களைக்க வாய்ப்புள்ளதால் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந் தேதி போராட்டக்காரர்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது.போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

தூத்துக்குடியில் கலெக்டர் அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர்.இதனால் தூத்துக்குடி நகரமே கலவர பூமியாக மாறியது. போராட்டக்காரர்களை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். படுகாயம் அடைந்த 48 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Tags :
Advertisement