For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

 திருப்பூர் அருகே  அரசுப் பள்ளியில் நிலவும் இட நெருக்கடி!வீடுகளை வாடகைக்கு எடுத்து வகுப்பு நடத்தும் ஆசிரியர் !

07:19 PM Jun 11, 2018 IST | Venu
 திருப்பூர் அருகே  அரசுப் பள்ளியில் நிலவும் இட நெருக்கடி வீடுகளை வாடகைக்கு எடுத்து வகுப்பு நடத்தும் ஆசிரியர்
Advertisement

அரசுப் பள்ளியில் நிலவும் இடநெருக்கடி காரணமாக திருப்பூர் அருகே  அருகிலுள்ள வீடுகளுக்கு ஆசிரியர்களே வாடகை கொடுத்து வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

பெரியபாளையத்தில் இயங்கி வரும் பாரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பயின்று வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இங்கிருந்த சேதமடைந்த 2 வகுப்பறைக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.

புதிய கட்டிடம் கட்டும் பணிகளும் தொடங்கப்படாத நிலையில், கடுமையான இடநெருக்கடி காரணமாக ஆசியர்களே ஒன்றிணைந்து அருகிலிருந்த வீடுகளை வாடகைக்கு எடுத்து வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.  எனவே மாவட்ட நிர்வாகம் புதிய கட்டிடம் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Tags :
Advertisement