For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!

01:16 PM Jul 11, 2018 IST | Dinasuvadu Web
தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
Advertisement

ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்  சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐ ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்தது. மேலும் கோயில்களில் உள்ள சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக 21 வழிமுறைகளையும் வழங்கி இருந்தது.

மீண்டும் இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்த போது சிலைகளை பாதுகாப்பாக வைக்க பாதுகாப்பு அறைகள் அமைப்பது தொடர்பாக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஐஜி பொன்மாணிக்கவேல் குறிப்பிட்டார். அதற்கு அரசு தரப்பில் கோயில்கள் புனரமைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் பாதுகாப்பு அறை கட்டுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோயில்களில் சிலைகள் பாதுகாப்பு அறை அமைப்பது தொடர்பாக அறிக்கையை ஜூலை 11ம் தேதி தாக்கல் செய்யாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்துள்ளார்.

தற்போது சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற நேரிடும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags :
Advertisement