For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

சென்னை அசோக் பில்லர் அருகே வணிக வளாகத்தில் தீ விபத்து..!

07:23 PM Jun 02, 2018 IST | Dinasuvadu Web
சென்னை அசோக் பில்லர் அருகே வணிக வளாகத்தில் தீ விபத்து
Advertisement

சென்னை அசோக் பில்லர் அருகே வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டது.

சென்னை அசோக் பில்லர் அருகே TRB complex கட்டிடத்தில் கடைகள், வர்த்தக நிறுவனங்களும், மூன்றாவது மாடியில் சில குடியிருப்புகளும் உள்ளன. தரைத்தளத்தில் மின்இணைப்பு மீட்டர்பெட்டிகள் அமைந்துள்ள பகுதியில் மின்கசிவு காரணமாக மாலை 3 மணியளவில் தீப்பிடித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட கரும்புகை கட்டிடத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பரவியது. அருகிலேயே தீயணைப்பு நிலையம் அமைந்திருந்ததால் வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொன்டு வந்தனர். கரும்புகை சூழ்ந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் சிலர் கட்டிடத்திற்கு வெளிப்புறம் ஏணி வழியாக பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த தீ விபத்தினால் பெரிய அளவில் பொருட்சேதமோ யாருக்கும் பாதிப்புகளோ இல்லை

Tags :
Advertisement