For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

ஐ.ஏ.எஸ்.அகாடமி மாவட்ட நூலகங்களில் அமைத்து பயிற்சி வழங்கப்படும்!பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

12:59 PM Jun 08, 2018 IST | Venu
ஐ ஏ எஸ் அகாடமி  மாவட்ட நூலகங்களில் அமைத்து பயிற்சி வழங்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
Advertisement

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,மாவட்ட நூலகங்களில் ஐ.ஏ.எஸ். அகாடமி அமைத்து அனைத்து தரப்பினருக்கும் பயிற்சி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின் போது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூர் தொகுதியில் நூலகங்கள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால், அதனை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பழுதடைந்த நூலகங்கள் அனைத்தும் சீரமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும் 32 மாவட்டங்களில் உள்ள மாவட்ட நூலகங்களில் ஐ ஏ எஸ் அகாடமி அமைத்து அனைத்து தரப்பினருக்கும் பயிற்சி வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைசச்ர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Tags :
Advertisement