For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது!

10:35 AM Nov 08, 2023 IST | gowtham
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது
Cyclone Biparjoy [File Image]
Advertisement

மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்து 2 நாட்களுக்கு மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

இந்நிலையில், கடலோர பகுதி சீற்றத்துடன் காணப்படும் என்றும் அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பும் என்பதால், மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்று மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தபடுகிறார்கள்.

11 மாவட்டங்களில் கனமழை

இதற்கிடையில், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை நிலவரம்

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

Tags :
Advertisement